புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காணிப் பிரச்சினை ஒன்றில் தனது தந்தையை அடித்துக் கொன்ற மகன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று சியம்பலாண்டுவ பகுதியில் பதிவாகியுள்ளது.இச்சம்பவம் குறித்து பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில்,

67 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த 2012-08-01ம் திகதி மாலை 7.30 அளவில் தனது 35 வயதுடைய மகனால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இக்கொலைக்கான காரணம் காணிப் பிரச்சினை என தெரியவந்துள்ளது.

தந்தையை கொலை செய்துவிட்டு மகன் தலைமறைவானதை அடுத்து சியம்பலாண்டுவ பொலிஸார் சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

எனினும் குறித்த சந்தேகநபர் தனது மனைவியின் தாயுடைய வீட்டுக்கு முன்னால் இருக்கும் மா மரத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top