புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒழுங்கீனமாக நடந்து கொள்வது அல்லது அடிதடி மோதலில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் மீது பள்ளிக்கூட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை கேள்விப்படுகிறோம். ஆனால் கூந்தல் நிற பிரச்சினையால் இங்கிலாந்து நாட்டில் பள்ளிக்கூடத்திற்குள் நுழைய ஒரு மாணவிக்கு தடை
போடப்பட்டது. இங்கிலாந்தின் மிடில்டோன் நகரில் வசிக்கும் மாணவி பெர்ன் புர்கி (வயது 14). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்புக்கு செல்கிறார்.

மாநிற மேனி படைத்த அவருக்கு தனது கூந்தலை சிவப்பு நிறமாக மாற்றி ரசிக்க ஆசை. இதனால் பள்ளி கோடை விடுமுறையின் போது முடிக்கு சிவப்பு டை அடித்து விட்டார். சில வாரங்களில் அது வெளுத்து விட்டது. இந்நிலையில் பள்ளிக்கூடம் திறந்து விடவே மாணவி பெர்ன் வகுப்பு சென்ற போது அவரை ஆசிரியை அனுமதிக்க மறுத்து வெளியே அனுப்பி விட்டார். ‘உன் தலை முடி நிறம் சரி இல்லை. அதை இயற்கையான தலைமுடியை போல கறுப்பாக மாற்றி கொண்டு வந்தால் மட்டுமே வகுப்பில் இருக்கலாம்’ என்று கூறி தடை போட்டு விட்டார். ஆடை கட்டுப்பாடு போல அந்த பள்ளி நிர்வாகம் தலை முடிக்கும் (கூந்தல் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும்) கட்டுப்பாடு வைத்திருக்கிறது.

மாணவியின் தாயார் திரேசா புர்கியும் ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியை ஆவார். இப்பிரச்சினை அவர் கூறுகையில், ‘பள்ளிக்கூட விதிமுறை சரியே. அதற்காக அவளுக்கு 2 தடவை கருப்பு டை அடித்து பார்த்தோம். ஆனால் அது எடுபடாமல் போனதால் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. தலைமுடியை கறுப்பாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்’ என்கிறார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top