செல்லமாக வளர்த்து வந்த கிளி திருடு போனதால், மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தின் குளூசஸ்டர்ஷயர் பகுதியை சேர்ந்தவர் லோயிஸ் ஒயிட் (61). தன்னுடைய வீட்டில் ஆப்ரிக்க வகை கிளி ஒன்றை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். 6 ஆண்டுகளாக அதை செல்லமாக பராமரித்து வந்தார்.
இந்நிலையில் கிளி திடீரென காணாமல் போய் விட்டது. அதிர்ச்சி அடைந்த லோயிஸ், உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து வீடு, தோட்டம், அருகில் இருந்த மரங்களில் தீவிரமாக தேடினர். அவர்களுடன் சேர்ந்த லோயிசும் சல்லடை போட்டு தன்னுடைய செல்ல கிளியை தேடினார்.
ஆனால், கிளி எங்கும் இல்லை. கிளி காணாமல் பதற்றத்தில் இருந்த லோயிசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. அதை பார்த்த போலீசார், உடனடியாக டாக்டரை வரவழைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். நல்லவேளையாக பயப்படும்படி அவருக்கு பாதிப்பில்லை. எனினும், ஆசையாக வளர்த்த கிளி காணாமல் போனதால் சோகத்தில் இருக்கிறார் மூதாட்டி.
0 கருத்து:
கருத்துரையிடுக