இணையத்தள பாவனை, பென்டிரைவ்களின் பாவனை போன்றவற்றின் மூலம் கணனிகள் வைரஸ்கள், மல்வேர்களின் தொற்றுதலுக்கு உள்ளாகுகின்றன.இதனால் அவற்றின் செயற்பாடு பாதிக்கப்படுவதுடன், தகவல்கள் அழிக்கப்படுதல் மற்றும் திருடப்படுதல் போன்றவற்றிலிருந்து
பாதுகாப்பதற்கு அன்டிவைரஸ்கள் பெரும்பங்காற்றுகின்றன.
இவ்வாறான அன்டிவரைஸ்கள் வெவ்வேறு நிறுவனங்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுள் சில இலவசமாகக் கிடைக்கின்றன.
அதேபோன்றே அதிகளவில் பிரபல்யமான AVG அன்டிவரைஸ் தனது புதிய பதிப்பான Anti Virus 2013 எனும் பதிப்பினை அனைத்து பயனர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் முற்றிலும் இலவசமாக வெளியிட்டுள்ளது.
இதில் முன்னைய பதிப்புக்களை விட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 32 bit, 64 bit இயங்குதளங்களுக்கென தனித்தனியாகவும் கிடைக்கின்றது.
AVG Free Antivirus 2013 - 32 bit - Offline Installer - தரவிறக்க சுட்டி
AVG Free Antivirus 2013 - 64 bit - Offline Installer - தரவிறக்க சுட்டி
0 கருத்து:
கருத்துரையிடுக