புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள RCMP காவல்துறை அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஒரு இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 24 வயது Russell Thomas Lamb என்பவர் டீன் ஏஜ் சிறுமியிடம் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். பின்னர் பின்னர்
பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரியான இன்ஸ்பெக்டர் David Fleugel கூறியதாவது: Russell Thomas Lamb என்பவன் மீது ஏற்கனவே 15 வயது சிறுமியிடம் தகாத முறையில் உறவு வைத்ததற்காக வழக்கு ஒன்று நடந்துவரும் வேளையில், மீண்டும் ஒரு டீன் ஏஜ் சிறுமியிடம் பாலியல் வல்லுறவு வைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளான். பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் திங்கட்கிழமை வரை அவனை காவலில் வைக்குமாறும், திங்கட்கிழமை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரனை செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார் என்றும் கூறினார். மேலும் இந்த வழக்கு குறித்து ஏதேனும் விபரம் தெரிந்தவர்கள் Serious Crimes Unit of the RCMP’s Ridge Meadowsஅதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top