மனைவிக்கு உதவியாக பாத்திரம் கழுவாததாலும், அழுக்கு துணிகளை துவைத்து தராததாலும் 30 சதவிகித விவாகரத்து ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.லண்டனை சேர்ந்த டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தற்போதுள்ள அவசரமான
சூழ்நிலையில் வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் பெண்கள் மீண்டும் வீட்டு வேலைகளை தொடர சிரமப்படுகின்றனர்.
அந்த நேரத்தில் கணவனின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றனர். இது நிறைவேறாத பட்சத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தில் முடிகிறது.
பாத்திரங்களை கழுவாமல் வைத்திருப்பது, அழுக்கு துணிகளை அதற்குரிய கூடையில் போடாமல் கண்ட இடத்தில் போடுவது போன்ற பிரச்னைகளால் ஒரு மாதத்தில் கணவன்-மனைவி இடையே குறைந்த பட்சம் மூன்று முறை சண்டை ஏற்படுகிறது.
இந்த சண்டை மாத கணக்கில் நீளும் போது மணமுறிவு ஏற்படுகிறது. இந்த சிறிய பிரச்னைக்காக 30 சதவிகிதம் பேர் விவாகரத்து செய்கின்றனர்.
கணவன் அல்லது மனைவியின் கள்ள உறவு காரணமாக 40 சதவிகிதம் பேர் மணவிலக்கு பெறுகின்றனர்.
மேற்கண்ட விடயங்களை ஒப்பிடுகையில், பண பிரச்னையால் ஏற்படும் விவாகரத்துக்களின் எண்ணிக்கை குறைவு தான். நகர்புறங்களில் தான் 56 சதவிகித விவாகரத்துகள் இந்த விடயத்துக்காக நிகழ்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக