நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தையா. இவரது மகன் பெரியசாமி (வயது 28). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மாதம் ஊருக்கு வந்தார். இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது
பெங்களூரை சேர்ந்த அன்னியப்பன் மகள் திலகேஸ்வரி(21) என்பவரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. பெரியசாமி-திலகேஸ்வரி திருமணம் நேற்று கடையநல்லூரில் நடைபெற்றது. முதலிரவு நடந்து முடிந்த நிலையில் மாப்பிள்ளை பெரியசாமி இன்று காலை மர்மமான முறையில் இறந்தார்.
வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருமணமான மறுநாளே மாப்பிள்ளை இறந்ததால் புதுப்பெண் திலகேஸ்வரி அதிர்ச்சியடைந்தார். திருமணவீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. மாப்பிள்ளை பெரியசாமி சாவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. வலிப்பு நோயால் இறந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக