புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டைட்டிலுக்கு மட்டும் ஒருபோதும் பஞ்சமே வருவதில்லை. நல்ல நல்ல பெயரைத் தவிர வித்தியாசமான பெயரையும் போட்டுத் தாக்கி படம் பண்ணி விடுகிறார்கள்.
முன்பெல்லாம் இலக்கிய நயம் மிக்க பெயர்களில் படங்கள் வந்தன. பின்னர் சில வருடங்களுக்கு முன்பு வரை ஆங்கிலப் பெயர்களாக வைத்துத் தள்ளினர். அதை விட கொடுமையாக ஏய், போடா, வாடா, சண்டை என்று கொத்துப் புரோட்டா போட்டனர். அதற்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் முடிவு கட்டினர். இதையடுத்து தமிழ்ப் பெயர்களில் பெயர்கள் வர ஆரம்பித்தன.
இந்த நிலையில் பேஸ்புக் என்ற பெயரில் ஒரு புதுப் படத்திற்குப் பெயர் போட்டுள்ளனர். இந்தப் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் படத்திற்கு வரிச் சலுகை கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்து தயாரிப்பாளர்களுக்கு கவலை இல்லை போல. படத்திற்கான பன்ச் லைனாக காதல் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை என்று தனியாக எந்த செய்தியும் தரத் தேவையில்லை. காரணம், பேஸ்புக் மூலம் ஏற்படும் ஒருகாதலைத்தான் இப்படம் சொல்லப் போகிறதாம்.
படத்தில் காதலுடன், கவர்ச்சியும் கரைபுரண்டோடும் என்று படத்தின் நாயகியைப் பார்த்தாலே தெரிகிறது…
வரட்டும், பார்க்கலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top