புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நைஜீரியாவில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை பிரான்ஸ் பொலிசார் கைது செய்தனர்.பிரான்சில் கும்பல் ஒன்று, நைஜீரியாவில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஆய்வு நடத்தியதில், பன்னிரண்டு பேரை ஆட்கடத்தல், கறுப்புப் பணம், விபச்சாரத் தரகர் போன்ற வழக்குகளில் பொலிசார் கைது செய்தனர்.

மேலும் இது போன்று பல்வேறு நகரங்களில் இவர்கள் இத்தொழிலை நிறுவன முறையில் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த கும்பலின் தலைவர்கள் பலர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தனது ஊர்ப் பெண்களை பிரான்சுக்குக் கொண்டுவர 60,000 யூரோ வழங்குகின்றனர்.

இந்த தொகையை அந்த பெண்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டு மாதம் 600 யூரோ வீதம் 8 வருடம் மற்றும் நான்கு மாதங்கள் செலுத்த வேண்டும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top