எனது நண்பனின் புலம்பல் ஐரோப்பா நேரம் 3 .45–மணிக்கு தொலைபேசி அடித்தது.நான் இந்த நேரம் யாராக இருக்கும் என்ற ஏக்கத்துடன் ”ஹலோ” என்றேன் .
டேய் உன் நண்பன் கண்ணன் என்றன்”
ஓமட சொல்லு” என்றேன் அவனோ எங்களுடைய பழைய குறும்பு தனமான வாழ்கை நினைவுகளை மீட்டுக்கொண்டு போனான் .
நான் ‘எடுத்த விஷயம் என்ன??” என்றேன் .
அவன் கோபத்துடன் ”என்னுடன் கதைப்பதுக்கு விருப்பமில்லையோ??” என்றான் கண்ணா.
நான் ”அப்பிடி ஒன்றும் மில்லை வேலைக்கு போவதுக்கு நேரம் போகுது” என்றேன்
மீண்டும் எனக்காக 10 நிமிடம் கதைப்பியா??” என்றான் கண்ணன் .
சரி சரி நண்பா எடுத்த விஷயம் என்ன என்ன சொல்லு சொல்லு” .
இல்லையாட நண்பா வெளிநாட்டில் இருந்து அம்மன் கோயில் திருவிழாவிற்கு நிறைய மக்கள் வந்துள்ளனர் அவர்களே பார்க்கும் பொது ஒருவிதத்தில் கோபமும் போறோமையும் வருகுது நானும் தற்போதவெளிநாடு வரபோகின்றேன்” என்றன் கண்ணன்.
எல்லோரும் வெளிநாடு வருவதுக்கு ஆசைப்படுகிறார்கள் . அந்த ஆசை எளிதில் கிடைத்து விடுவதில்லை . சிலருக்குத்தான் அந்த பாக்கியம் கிடைக்கிறது . குடும்பத்தில் வறுமை, கஷ்டம் , பிரச்சனை , குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து வெளிநாடு வருவார்கள்.
உனக்கு என்ன கஸ்ரம் இப்ப நீ கடை முதலாளி நல்லாதானே இருக்கின்றே? .திடிரென்று என் இந்த மாற்றம்?’ என் நீ உப்பட பழைய நண்பர்கள் எல்லாம் வெளிநாடு வந்து விட்டர்கள் உன்னுடைய போட்டோவையும் பார்த்தேன் நீ அந்த மாதிரி இருக்கிறாய் என்றன் அதுதான் நானும் வெளிநாடு வரவேனுபோல என்றன் கண்ணன்
மறுபடியும் நான் இப்ப வெளிநாட்டு வாழ்கை விட ஊர் வாழ்கை பரவாய் இல்லை என்றேன் அதற்குமேல் வெளிநாடு வந்த உடனே வேலை கிடைத்து விடுமா ?
அங்கும் இங்கும் தேடி வேலைக்கு அலைகிறார்கள் . வந்த உடனே விசா கிடைக்குமா? . பத்து வருடங்கள் ஆகியும் விசா கிடைக்காமல் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்
வெளி நாட்டு விசா கிடைக்காமல் ஒரு சிலர் ஓடி , ஒழித்து ஒருநேர வேலை என்றாலும் செய்து தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புகிறார்கள்
ஒரு விதத்தில் பழைய மாதிரி இப்ப வெளிநாடு இல்லையாட .அவனோ நான் சொல்லுவதை நம்ப மறுத்து விட்டான் உன்னிடம் எந்த உதவியும் கேட்கமாட்டேன் என்றான் சிறு மனக்கவலையுடன், சில காலம் கழித்த பின் நண்பன் வெளிநாடு வந்து விட்டார் என்று அறித்துகொண்டேன்
அவரின் கைதொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் டேய் நான் உன் நண்பன் என்றேன் வெளிநாடு எப்பிடி போகுது என்று நண்பனிடம் கேட்டேன்.
அவன் சொன்னான்.
என்ன சொல்றது? எல்லாப் பொண்ணுங்களும் எப்பிடி உடுத்துறாங்க தெரியுமா?
பலபேரு பார்த்துக்கிட்டு இருக்கும் போது கட்டிப்பிடிச்சுக் கொஞ்சுறாங்கடா.
நான் எந்த நேரமும் போன் பண்ணி எப்பிடி சுகம் என்று கேட்டலும் அவன், ஒரே வெள்ளைக்காரிகளைப் பற்றித்தான் பேச்சு
சரி சரி இப்பதானே வெளிநாட்டுக்கு புதியவன் என்று நான் உணர்ந்து கொண்டேன் .
மீண்டும் பல மாதங்களின் கழித்த பின் நண்பனின் கைத்தொலைபேசியில் இருண்ட குரலில் எதோ கவலை தெரித்தது.
என்னவென்று கேட்டேன் இங்குவெளிநாட்டில் இருப்பது என்றால் முதலில் இந்த நாட்டு விசா தேவை .
விசா இல்லை என்றால் நான் ஒரு நாடோடி வாழ்கை என்றன் பெரும்மூச்சுடன் அவனின் புலம்பல்கள் தொடர்த்தது
என்ன வாழ்கையட நண்பா.பணம் சம்பாதித்தாலும் அநாதை போல வாழ்கை வசதி இருந்தாலும் ஒரு முறை சமைத்து குளிர் சாதனா பெட்டியில் வைத்து சாப்பிடுகின்றேன் .
.நண்பர்கள் வீட்டிற்கு போவதென்றாலும் போனில் அனுமதி வாங்க வேணும்.
வேலை இழந்தால் வெகு சீக்கிரம் நடுத்தெருவில் வந்து நிற்பதை நினைத்து மனம் வேதனைபட்டான் .
நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்திற்கும் ஒழுங்காக வரி கட்டிவிட வேண்டும் ..
போலிஸ்காரரிடம் மாட்டினால் லஞ்சம் கொடுத்து தப்பிக்க முடியாது .
இரவு 7 மணிக்கு மேல் காய்சல் மற்றும் உடல்நிலை சரியில்லை என்றால் எந்த டாக்டர் வீட்டு கதவை தட்ட முடியாது .அதற்கு மேல் இந்த நாட்டு மொழி தெரியாது
பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு மணிக்கணக்கில் தவியாய் தவித்து காத்துகிடப்பதை சொல்லுறதா .
பண்டிகைகாலங்களில் எமது ஊரில் இருப்பவர்கள் போல அனுபவிக்க முடியாமல் வார இறுதியில் மட்டும் கோயிலுக்கு சென்றோ அல்லது வெளிநாட்டில் உள்ள உறவுகளின் பிறந்த நாள் நிகழ்வு அல்லது திருமண நிகழ்வுகளிலும் எம்மவர்களின் ஒன்று கூடலிலும் நாங்கள் அழகு பொம்மைகளாக வருவதை சொல்லவா .
குழந்தைகள் வெளியிடங்களில் செய்யும் தவறுகளை பார்த்தவர்கள் அதை வந்து சொல்லுவதில்லை .
கஷ்டம் என்று வந்துவிட்ட பிறகு சிறிய உதவிகள் செய்யகூட ஆள் இருக்கமாட்டார்கள்
பகல் இரவு என்று கஷ்டப்பட்டு நித்திரையும் இல்லாமல் உழைத்து தமது கடன்கள் எல்லாவற்றையும் அடைத்து விட்டேன் என்றான் பெரும்முச்சுடன்
பின்பு தமது குடும்பத்தில் இருக்கும் அக்கா , தங்கைமாருக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் , சீதனம் கொடுக்க வேண்டும் என்று அவர்களின் பொறுப்புகள் இருக்கின்றன . தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கி கடும் குளிரும் பாராது கஷ்டப்பட்டு உழைத்து கொண்டு இருக்கின்றேன்
நான் ஊரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் போது தெரியவில்லை நீ சொல்லியும் நான் நம்பவில்லை
இப்ப நான் கடும் குளிர் , கஷ்டமான வேலை என்று படும் கஷ்டங்கள் ஏராளம் . ஊரில் உள்ள .ஊறவுகள் வெளிநாடு என்றவுடன் மிகவும் சுலபமாக நினைத்து விடுகிறார்கள் . எனது மகன் வெளிநாட்டில் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டு சுதியாக . தம்பி மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றித் திரிகிறான்
தங்கை பைக்கில் தோழிகளுடன் ஊர் சுற்றி திரிகிறாள் . என்ன என்று கேட்டால் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறான் . எங்களுக்கு என்ன கவலை ?
இதை பார்க்கும் அயல் வீட்டு உறவுகள் அவன் வெளிநாடு போய் நன்றாக உழைக்கிறான் , வீடு வாங்கிவிட்டான் என்றெல்லாம் பொறாமை படுகிறார்கள் . நாமும் எமது பிள்ளையை படிக்க வைத்து அவனுக்கு நல்ல வேலை கிடைத்து சம்பாதித்து நாம் கார் , வீடு என்பன வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் . அவன் வெளிநாட்டில் உழைக்கிறான், சம்பாதிக்கின்றான் , வாங்குகிறான் . அதை நினைத்து நீங்கள் பொறாமை பட்டு என்ன நடக்க போகிறது . ஒரு வேளை சோறு அவனா போடப்போகிறான் . இதை உணர்வது யார் யார் ?
எனது நண்பனின் புலம்பல் இப்படித்தான் எல்லா வீடுகளிலும் நடக்கின்றது . ஒரு வீட்டில் அப்பாவோ , அண்ணனோ வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புகிறார்கள் எனக்கு என்ன ? என்று ஆடம்பரமாக இருப்பார்கள் . மரக்கறி சந்தைக்கு போய் குறிப்பாக மீன் சந்தையில் மீன் விலை பேசாமல் வாங்கி விட்டு பணத்தை ஆயிரமாயிரமாய் கொடுத்து விட்டு வருபவர்களும் உள்ளனர் . . எல்லோரும் கஷ்டத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் . நாங்களும் மனிதர்கள் தானே . வெளிநாடு வெளிநாடு என்று அதிக பணத்தையும் , சொத்துகளையும் இழந்தவர்களின் கவனத்துக்கு … என் வாழ்கை ஒரு நாடோடி மாதிரி போகுது என்று கவலையுடன் ரெலிபோனில் புலம்பினான்
இதில் இருந்து கண்ணன் உணர்ந்து கொண்டான் ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்து காட்டும் நாடகம் நடிப்புக்கு அனைத்து வெளிநாட்டு உறவுகளையும் தப்பு கணக்கு போட்டு விட்டேனே என்ற கவலையுடன் அவர்கள் பந்த காட்ட வில்லை மாறாக என் பார்வையில் கோளறு என்று உணர்ந்தேன் .இனியாவது புலத்தில் உள்ள ஊறவுகளே. வெளிநாட்டில் இருந்து எவ்வளவே பணத்தை செலவழித்து
உறவுகளுடன் அன்பும் பாசமாகவும் சந்தோசம் பகிர வருகின்றார்கள் என்பதை உணரந்தான் கண்ணன்
அதற்குப் பிறகு அவன் தன்னை ஆராய்ந்து, தான் சென்று கொண்டிருக்கும் பாதை சரிதானா என்று முடிவு செய்யவேண்டும். என்றும் தன்னுடைய நிலைக்கு தானே காரணம் என்ற அறிவைப் பெற்றபின் அவனுக்குப் புலம்புவதற்கு காரணம் கிடைக்கவில்லை
யாவும் கற்பனையுடன் சில தேடல்கள் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருக்கின்றன! சர்ச்சைகள் கிளப்பப்படும் போதுதான் அதற்கு தீர்வுகளும் கிடைக்கின்றன!
தொடரும் மீண்டும் புலம்பல்கள் .
அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன் …..
0 கருத்து:
கருத்துரையிடுக