புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து விடுதலையான வயதான தம்பதி நிலத்திலும் கடலிலும் பயணிப்பதே எங்கள் வாழ்க்கை என்று உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.பால் சேண்டலர் மற்றும் அவரது மனைவி ரேச்சல் சேண்டலர் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக லின் ரைவல் என்ற சொகுசு படகில் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்க்க புறப்பட்டனர்.


இந்நிலையில் பயணத்தின் போது சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிடிப்பட்டனர்.

இவர்களுக்கு 625000 பவுண்டுகளை பிணைய நிதியாக கடற்கொள்ளையர்கள் விதித்தனர். ஆனால் 280000 பவுண்டுகளை கொடுத்தே இந்த வயது முதிர்ந்த தம்பதியினரை அவர்களது உறவினர்கள் மீட்டனர்.

2009 ம் ஆண்டு கைதான இந்த தம்பதிகள் 2010 ம் ஆண்டு நவம்பரில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தங்களது உலகம் சுற்றும் பயணத்தை மீண்டும் தொடங்கினர்.

கடந்த 2 வருடங்களாக உலகின் பெரும்பான்மையான பகுதிகளை சுற்றிய இவர்கள், நிலத்திலும் கடலிலும் பயணிப்பதே எங்கள் வாழ்க்கை என்று உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top