புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிகாகோவில் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் தாய் ஒருவர், தனது மகளின் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.சிகாகோவைச் சேர்ந்தவர் சின்டி ரூட்ஜெல்( வயது 53). அவரது மகள் எமிலி ஜோர்டான்(வயதுது 29), மருமகன் மைக்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எமிலி கர்ப்பமானார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கர்பப்பையின்
வாயில் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து கருவை கலைத்ததுடன் எமிலியின் கருக்குழாய் அகற்றப்பட்டது.
குழந்தைக்காக ஏங்கிய எமிலிக்கு சிகாகோ மருத்துவமனை நம்பிக்கை அளித்தது. செயற்கை கருத்தரிப்பு மூலம் எமிலியின் கருமுட்டையை மைக்கின் விந்தணுவுடன் சேர்ந்து அதை எமிலியின் தாய் சின்டியின் கருப்பையில் ஏற்றினர். சின்டி இந்த வாரம் தான் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு எல்லி என்று பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து சின்டி கூறுகையில், எமிலிக்கு குழந்தை பிறக்காது என்பதை கேள்விப்பட்டு கூறுகையில், எமிலிக்கு குழந்தை பிறக்காது என்பதை கேள்விப்பட்டு மனமுடைந்து விட்டேன். அதன் பிறகு செயற்கை கருத்தரிப்பு மூலம் நான் என் மகளுக்கு எனது பேத்தியைப் பெற்றெடுத்துக் கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top