புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையில் பாலியல் கல்வி என்பது மிகவும் அரிதாகவே புகட்டப்படுகின்றது. குறிப்பாக பாடசாலைகளில் சிறுவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ரொம்பவே குறைவு. இதனால் சிறுவர்கள் பாலியல்
துஷ்பிரயோகங்களுக்கு பலிக் கடாக்கள் ஆக நேர்ந்து விடுகின்றது.

பலாங்கொடவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக சொந்தத் தகப்பனால் பாகியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றார். சிறுமியின் தாய் இறந்து விட்டார்.தகப்பனும், சிறுமியும்தான் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.

ஆனால் தகப்பனால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கின்றார் என்கிற விடயம் திருமண வாழ்க்கை, இனப் பெருக்கம், கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் ஆகியன குறித்து ஆசிரியர் சில விளக்கங்களை வகுப்பறையில் மாணவர்களுக்கு சொல்கின்ற வரை இச்சிறுமிக்கு தெரிய வந்து இருக்கவில்லை.

பாடத்தைத் தொடர்ந்து ஆசிரியரை சந்தித்துப் பேசி இருக்கின்றார் சிறுமி.தகப்பனால் நடத்தப்பட்டு வந்திருக்கின்ற விதம் குறித்து சொல்லி இருக்கின்றார்.

விபரீதத்தை புரிந்து கொண்ட ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்த பிற்பாடு பொலிஸாருக்கு அறிவித்து உள்ளார்.

பொலிஸார் இத்தகப்பனை கைது செய்து உள்ளார்கள். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top