புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது 35வது பிறந்த நாளை (ஒக்ரோபர் 18)சினிமா நட்சத்திரங்களுடன் நட்சத்திர ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடினார் ஜோதிகா.
கொலிவுட்டில் கொடி கட்டிப்பறந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர்.


வாலி படத்தில் அறிமுகமாகி, குஷி, காக்க காக்க, மன்மதன், சந்திரமுகி போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

திரையுலக சூப்பர் ஹீரோ சூர்யாவை 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தன் 35வது பிறந்த நாளை சினிமா நட்சத்திரங்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் ஜோதிகா.

விழாவில் குஷ்பு, அனுஷ்கா, ராதிகா, லிசி, நதியா, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிங்கம் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் ஜோ பிறந்தநாளுக்கு சூர்யா வரவில்லை. இவர்களுக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top