ஜேர்மனியில் இளம்பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நபர் கைது
ஜேர்மனியில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.ரெபேக்கா என்ற 17 வயது இளம்பெண்ணை, 28 வயது மதிக்கத்தக்க மரியோ என்பவர் கடத்தி சென்றார்.
தெருவில் வைத்து அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளதுடன், வீட்டுக்கு கொண்டு சென்று கட்டி போட்டு வைத்துள்ளார்.
அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்கள் அப்பெண்ணை பாலியல் ரீதியான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தப்பித்து வந்த பெண் பொலிசாரிடம் முறையிட்டார்.
இதனையடுத்து பொலிசார் மரியோவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மரியோ பதின்வயது பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் பாலியல் குற்றத்திற்காக மரியோ மூன்றாண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்ததும், மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக