புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் ஒருவரின் வயிற்றில் இருந்து 90 புழுக்களை வெளியில் எடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சாதனை புரிந்து உள்ளார்கள்.

இச்சிறுவன் வயிற்று வலியால் பேரவஸ்தைப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சேர்க்கப்பட்டார்.

இவரது பெருங்குடலில் ஏராளமான புழுக்கள் பல்கிப் பெருகிய நிலையில் இருப்பதை பரிசோதனைகள் மூலம் வைத்தியர்கள் கண்டுபிடித்தனர். இவரை உடனடியாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி புழுக்களை வெளியில் எடுத்தார்கள். 90 புழுக்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் ஒரு அடியும், இரண்டு சென்ரி மீற்றரும் நீளம் உடையவை. வைத்தியர்களின் உடனடி நடவடிக்கையாலேயே சிறுவனின் உயிரை காப்பாற்ற முடிந்து உள்ளது. சிறுவன் பல வருட காலமாக பூச்சிக்கான மருந்து உட்கொள்ள தவறியமையே விபரீதத்துக்கு காரணமாகி உள்ளது.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top