புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதல் கணவனால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட நெல்லை கர்ப்பிணி பெண் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியை சேர்ந்த சமுத்திரம் மகள் சுந்தரி என்ற பிச்சம்மாள் (24). இவர் ஈரோட்டில் ஒரு
மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும் அங்கு டீ வியாபாரம் செய்து வந்த முருகேசன் (28) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்தது. சில தினங்களுக்கு முன்பு முருகேசன் திருச்சூரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறி பிச்சம்மாளை ரயிலில் அழைத்துச் சென்றார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை முருகேசன், திருச்சூர் அருகே சொர்ணவூர் என்ற இடத்தில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த பிச்சம்மாளை அங்கு வயலில் வேலை பார்த்தவர்கள் மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததால் கர்ப்பபையை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிச்சம்மாள் இன்று அதிகாலை இறந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top