புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியுடன், அவர் அடைக்கப்பட்ட அறைக்குள்ளேயே வைத்து உறவு கொண்டு சிக்கியுள்ளார் ஒரு சிறை நர்ஸ். அவர் உள்ளே போய் உல்லாசமாக இருந்தபோது சக காவலர்கள் வெளியில் இருந்தபடி காவல் காத்துள்ளனர். அந்த நர்ஸுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் கரேன் காஸ்போர்ட். இவருக்கு 47 வயதாகிறது. இவர் மேற்கு யார்க்ஷயரில் உள்ள வேக்பீல்ட் சிறையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் பிரையன் மெக்பிரைட். இவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் மீது காதல் கொண்டார் கரேன். விடுதலையாகி வெளியே வந்த பின்னர் மணந்து கொள்ளலாம் என்று பிரையன் கூறியிருந்தார். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது என்று முடிவு செய்த கரேன், பிரையனுடன் உடல் ரீதியாகவும் நெருக்கமாக தீர்மானித்தார்.
இருவரும் நெருக்கமாக பழகி வருவது சிறைக் காவலர்களுக்கும் தெரிய வந்தது. இருப்பினும் அவர்களை பணத்தால் அடித்து விட்டார் கரேன். இதனால் அவர்கள் கரேன்- பிரையன் காதலுக்குத் துணையாக இருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் பிரையன் அறைக்குப் போனார் கரேன். அவருக்குத் துணையாக இருந்த காவலர்கள் 3 பேரும் உடன் வந்தனர். அவர்கள் பிரையன் அறைக்கு வெளியே காவலாக இருந்தனர். உள்ளே போன கரேன், பிரையனுடன் உல்லாசம் அனுபவித்தார்.
இதுபோல சில முறை இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். கரேனின் கணவர் அதே சிறையில்தான் விசாரணை அதிகாரியாக உள்ளார். ஒருமுறை அவர் பிரையனை விசாரிப்பதற்காக அவரது அறைக்குப் போயுள்ளார். வெளியே 3 காவலர்கள் இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்த அவர் பிரையன் அறைக்குள் போய்ப் பார்த்தபோது மனைவியுடன், பிரையன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார்.
இந்த செய்தி சிலர் மூலமாக காட்டுத்தீ போல சிறை முழுக்கப் பரவியது. இதையடுத்து நால்வரையும் அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கரேனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் அதேபோல தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top