துபாயை சேர்ந்த பெண் டாக்டருக்கும் வாலிபர் ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்த வாலிபருக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்தது. அவரது லேப்டாப்பில் வித, விதமான ஆபாச படங்களை பதிவு செய்து வைத்து
இருந்தார்.
அதை அடிக்கடி பார்த்ததுடன் தனது மனைவியையும் படம் பார்க்க வற்புறுத்தினார். இதனால் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு பெண் டாக்டர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி அவருக்கு விவாகரத்து அளித்து தீர்ப்பு வழங்கினார். விவாகரத்து தருவதாக இருந்தால் தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் தர வேண்டும் என்று கணவர் கேட்டார் ஆனால் கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு பற்றி பெண் டாக்டர் தரப்பினர் கூறும் போது முதலிரவின் போது கணவருக்கு வி.டி. நோய் தாக்கி இருப்பதை பெண் டாக்டர் தெரிந்து கொண்டார். எனவே இதற்காக சிகிச்சை பெறும்படி கூறினார். ஆனால் இதை அவர் ஏற்க மறுத்தார். எனவே அவர்கள் இருவரும் ஒருநாள் கூட கணவன்- மனைவியாக வாழவில்லை என்று கூறினார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக