புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞரொருவர் பிரதேச வாசிகளால் பிடிக்கப்பட்டு ஊர்வலமாக காங்கேசன்துறை வீதியால் நடத்திச்செல்லப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வாழும் 14 வயதுச் சிறுமியே இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரால் பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்தப்பட்டுள்ளார்.

அச் சிறுமி சுன்னாகம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள இடம் பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருபவராவார்.

குறித்த நபர் சிறுமியை ஏமாற்றி ஆட்கள் அற்ற காணியில் உள்ள பற்றையில் தகாத முறையில் உறவில் ஈடுபட்டிருந்த வேளையில் இதனைக் கண்ணுற்ற அயலவர்கள் குறிப்பிட்ட நபரை பிடித்துள்ளார்கள்.

சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top