புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

,இந்தியாவில் பாலக்காடுமாவட்டத்தில்  மூன்று குழந்தைகளை தவிக்க விட்டு தாய் கள்ளக்காதலனுடன் மாயமானார். அவமானம் தாங்க முடியாமல் தந்தை கள்ளக்காதலன் வீட்டின் முன் இருந்த மரத்தில் தூக்கு போட்டு
 தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்காடுமாவட்டம் பத்ரிபாலா அருகே மன்னூர் கிழக்குபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(34). இவரது மனைவி ஸ்ரீஜா(28). இத்தம்பதிக்கு அக்ஷை(8) அமிர்தா(4) அதுல்(2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளன. ஸ்ரீஜாவிற்கும் அருகில் வசிக்கும் மாதவன் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறியது. இதையறிந்த கோபாலகிருஷ்ணன் மனைவியை கண்டித்தார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி குழந்தைகளை தூங்க வைத்து விட்டு மாதவனுடன் ஸ்ரீஜா மாயமானார். இதுகுறித்து கணவர் கோபாலகிருஷ்ணன் மங்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குழந்தைகள் தினமும் ஸ்ரீஜாவை தேடத் துவங்கியதாலும், மனைவி மாயமான அவமானத்தாலும் நேற்று மாலை கோபாலகிருஷ்ணன் மாதவன் வீட்டின் முன் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top