புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரை குழந்தையைப் பிரசவிப்பதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை நஞ்சுக்கொடி அறுந்தமையால் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.துணுக்காய் விநாயகர் புரத்தைச் சேர்ந்த தவசிங்கம் ஜெயலட்சுமி (வயது39) என்ற பெண்ணும் அவரது குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.

துணுக்காயில் இருந்து பிரசவத்துக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குறித்த பெண்ணைக் கொண்டு செல்லும் போதே நஞ்சுக்கொடி அறுத்துவிட்டதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதனால் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது. தாயாருக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் அங்கு சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்.

விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top