நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 12 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 12 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 18,187 குடும்பங்களைச் சேர்ந்த 68,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6926 குடும்பங்களைச் சேர்ந்த 23,894 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 543 குடும்பங்களைச் சேர்ந்த 1841 பேர் 10 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, களனி கங்கை, களு கங்கை, ஜின் கங்கை, நில்வள கங்கை ஆகியவற்றில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நான்கு மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், இந்த ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த அறுவரில், கம்பஹா, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக