தமிழ் திரையுலகில் இருபது வருடங்களுக்கு மேலாக காமெடியில் கலக்கியவர் வடிவேலு. இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அக்கட்சி தோற்றதால் சினிமாவில் வடிவேலுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
புதுப்படங்களில் நடிக்க அவரை யாரும் அணுகவில்லை. ஒரு வருடத்துக்கும் மேலாக படவாய்ப்புகள் இன்றி வீட்டில் இருக்கிறார். வடிவேலு இடத்தை சந்தானம் எட்டிப்பிடித்துள்ளார். அதிக சம்பளம் பெறும் முன்னணி காமெடி நடிகராகவும் உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் விஷாலும், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் ஜோடியாக நடிக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வடிவேல் திட்டமிட்டார். படப்பிடிப்புக்கு செல்லவும் தயாரானார்.
ஆனால் திடீரென்று இந்த படத்தின் வாய்ப்பை சந்தானம் தட்டி பறித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷாலும் சந்தானமும் ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘தோரணை’ படங்களில் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர். தனது படவாய்ப்பை பிடுங்கியதால் சந்தானம் மேல் வடிவேலு கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
‘பட்டத்து யானை’ படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். சமீபத்தில் விஜயகாந்த் கட்சியில் இருந்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக மாறிய மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ இப்படத்தை தயாரிக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக