புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நயன்தாரா ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்தபோது, இன்னொருத்தரின் கணவரான பிரபுதேவாவை அபகரிக்கப்போகும் இவர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாது என்று அப்போது சில அமைப்புகள் நயன்தாராவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்தன.


ஆனாலும் எதிர்ப்புகளை மீறி அந்த வேடத்தில் நடித்து ஆந்திரா அரசின் நந்தி விருதினையும் தட்டி விட்டார் நயன்தாரா. இந்த நிலையில், தற்போது தமிழில் அவர் நடித்து வரும் ராஜா ராணி படத்துக்கும் புதிய சிக்கல் ஒன்று உருவாகியிருக்கிறது.

அதாவது, கதைப்படி ஜெய், நயன்தாராவை காதலிப்பாராம். ஆனால் சந்தர்ப்பவசத்தால் நயன்தாரா ஆர்யாவுக்கு மனைவியாகி விடுவாராம். அதேபோல், ஆர்யா காதலிக்கும் பெண் ஜெய்க்கு மனைவியாகி விடுவாராம். இதையடுத்து பண்டமாற்று முறையில் அவர்கள் மனைவியையே மாற்றிக்கொள்வார்களாம். இதையறிந்து சில அமைப்புகள் இப்படியொரு கதையை படமாக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆனால் நயன்தாராவோ, நவீன காலத்தில் இந்த மாதிரி வித்தியாசமான கதைகளைத்தான் ரசிகர்கள் வரவேற்பார்கள். அதனால் எதிர்ப்புகளை மீறி படமாக்குவோம்.

வெற்றி நமதே என்று படக்குழுவுக்கு தைரியம் கொடுத்து வருகிறாராம். ஆனால், குழுவினரோ, நயன்தாரா நடித்தாலே அந்த படத்துக்கு ஏதாவது ரூபத்தில் தலைவலி வருவது சகஜமாகி விட்டது, சரி சமாளிப்போம் என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top