அவுஸ்திரேலியா, பேர்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை மாணவர் ஒருவருக்கே இந்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
28 வயதுடைய டெக்சி சாரதியான சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே என்ற மாணவரை பேர்த் மாவட்ட நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
மது அருந்திய பின் உறக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் 18 மாத சிறை தண்டனையின் பின் 2014ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக