புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குழுவாக இருக்கும் எறும்புக் கூட்டத்தில் மூன்று வகை எறும்புகள் உள்ளன. இராணி எறும்பு, இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள், இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள் என்பனவே அவை. வேலைக்கார எறும்புகளில் சில வேவு பார்க்கும் பணியும் செய்பவை. இந்த எறும்புகள் அங்குமிங்கும் சிதறி, உணவு தேடிக் கண்டு பிடிக்கும் பணி புரிபவை.


சர்க்கரை போன்ற உணவுப் பொருளைக் கண்டறிந்த எறும்பு உடன் தனது கூட்டிற்குத் திரும்பும். திரும்பும் போது தனது அடி வயிற்றிலிருந்து வாசனைப் பொருள் ஒன்றைத் தொடர்ந்து தரையில் விழச்செய்யும். இவ்வாசனைப் பொருளை நுகரும் பிற எறும்புகள் அவ்வழியே சென்று சர்க்கரை அல்லது உணவுப் பொருட்களைக் கண்டறிந்து கொள்கின்றன

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top