கடித்த பாம்பை பிடித்து, போத்தலில் அடைத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உள்ளார் யாழ்ப்பாண யுவதி ஒருவர்
.
யாழ்ப்பாணத்தில் மிருசுவில் வடக்கை சேர்ந்தவர் பாலராஜா பாக்கியதேவி வயது 27. நேற்று முன் தினம் வைகறைப் பொழுதில் அரைத் தூக்கத்தில் இவர் இருந்து இருக்கின்றார். ஏதோ கடிக்கின்றது என உணர்ந்து இருக்கின்றார். பார்த்தால் வரிப் புடையன் பாம்பு. இவரை கடித்து விட்டு ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது. இதனை உடனடியாக பிடித்தார். போத்தல் ஒன்றில் அடைத்தார். பாம்பும் கையுமாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்று இருக்கின்றார். இவருக்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது
0 கருத்து:
கருத்துரையிடுக