இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவி உள்பட, மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் நீலமேகம் நகரை சேர்ந்த பச்சையப்பன் மகன் சத்யா, வயது- 37. இவர் ஓசூர் அருகே உள்ள சேவகானப்பள்ளியில் இருக்கும் பேட்டரி கம்பெனியில் வேலைபார்த்தார். இவரது மனைவி ஜோதி, வயது-26. இவர்களுக்கு திருமணமாகி, ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், மகன் உள்ளனர்.
கடந்த, 7-ம் தேதி அதிகாலை, ஓசூர் அருகே பீர்ஜேப்பள்ளி அடுத்த அடர்ந்த வனப்பகுதியையொட்டிய சாலையோரத்தில் சத்யா, கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். உத்தனப்பள்ளி போலீஸார், கழுத்து அறுபட்டு கிடந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
போலிசாரின் விசாரணையில், சத்யாவின் மனைவி ஜோதி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக கூட்டிகொண்டு சென்று விசாரித்தில், பல்வேறு தகவல் வெளியானது.
ஜோதியின் அத்தை மகன் குமார், வயது-26. இவர், பெங்களூரு இந்திரா நகரில் வசிக்கிறார். அடிக்கடி ஜோதி வீட்டிற்கு வந்து சென்ற போது, இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. சத்யா கம்பெனிக்கு வேலைக்கு சென்ற நேரத்தில், குமார் ஜோதியின் வீட்டிற்கு வந்து, ஜோதியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
வழக்கம் போலவே, கடந்த, 6-ம் தேதி பகலில் சத்யா வேலைக்கு சென்ற பின்னர் குமாரும், ஜோதியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நேரத்தில், திடீரென்று வீட்டிற்கு வந்த சத்யா, அதை பார்த்து, அதிர்ச்சியடைந்து தனது மனைவியை அடித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த குமாரும், ஜோதியும் சேர்ந்து சத்யாவை தாக்கினர். தலையில் காயம் ஏற்பட்டு மயங்கிய குமாரை வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து, சத்யா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பகல் முழுவதும், வீட்டில் மறைத்து வைத்திருந்த சத்யாவின் உடலை, இரவில், மோட்டார் பைக்கில் கொண்டு சென்று, பீர்ஜேப்பள்ளி வனப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், வீசிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து விட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீஸார், ஜோதியையும், குமாரையும் கைது செய்தனர். மேலும், குமாருக்கு உதவியாக இருந்தது மற்றும் அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக பெங்களூருவை சேர்ந்த மகேஷ், வயது-25 என்பவரையும் கைது செய்தனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக