புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நான்கு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்த தாத்தாவுக்கு களுத்துறை மேல் நீதிமன்றத்தால் 15 வருட
கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இவர் ஆறு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மொலேகவ என்கிற இடத்தில் 2005 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி குற்றச் செயல் இடம்பெற்று உள்ளது.

சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர். சிறுமிக்கு நண்டு காட்டுகின்றார் என்று சொல்லி அங்க சேஷ்டைகள் செய்து இருக்கின்றார் பாட்டன்.

இதன் மூலம் பாட்டன் பாலியல் திருப்தி கண்டிருக்கின்றார் என்பதை சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் நிரூபிக்க முயன்றபோதும் முடியாமல் போய் விட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top