தெரு வாழ்வுக்கு விடை கொடுத்த முதியவர்!கைதடி அரச முதியோர் முன்றலில்?(காணொளி)
ஆறுமுகம் பிறைசூடி என்ற 80 வயது மதிக்கத்தக்க முதியவர் கைதடி அரச முதியோர் முன்றலில் அநாதரவான நிலையில் வந்து நின்றார்.
விசாரித்ததில் பின்வரும் தகவல்கள் தெரியவந்தன.
தனது காணி சொத்துக்களை தமையனுக்கு வழங்கியதான மனைவி பிள்ளைகளின் குற்றச்சாட்டின் அடிப்படையில் வீதிக்கு விடப்பட்டதாகக் கூறினார்.
தமையனிடம் விசாரித்தபோது தனக்கு எதுவும் தரவில்லை எனவும் தினமும் வாசலில் வந்து திட்டைதான் பரிசாகத் தருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இவரின் வாழ்வுப்பயணம் வீதிகளில் கழிந்துள்ளது.
இந்த முதியவரின் மீதிக்கால வாழ்க்கைக்கு யார் பதில் சொல்வது? மனிதாபிமானப் பணியில்
முதியோர் இல்லம் முயல்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக