தொலைக்காட்சிகள் முன்பு குழந்தைகள் அதிக நேரம் செலவழிப்பதால் அவற்றில் ஒளிபரப்பாகும் வன்முறைக் காட்சிகளை தவறாமல் பார்க்க நேரிடுகிறது. பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் 8000 கொலைகளை பார்க்க நேரிடுகிறது. இதனால் குழந்தைகளிடையே வன்முறை உணர்வு அதிகரிக்கிறது என்கின்றனர்
நிபுணர்கள்.
தொலைக்காட்சிகளை பார்ப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது. ஒருவாரத்திற்கு சராசரியாக 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும்.
போதை விளம்பரங்கள்
ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன. குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்: 1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. 2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.
முரட்டுத்தனம் அதிகரிப்பு
தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.
குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன பள்ளிப்படிப்பை முடிக்குமுன் . 8000 கொலைகளை குழந்தைகள் பார்க்கின்றன. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
பெற்றோர்கள் பின்பற்றுங்கள்
ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது. இதில் மிகவும் முக்கியமாக தாய்மார்கள் பின்பற்ற வேண்டியது, குழந்தைகளை டி.வி பார்க்கக் கூடாது என்று கூறினால் மட்டும் போதாது. அதை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. அவற்றில் உண்மையில்லை என்பதை உணர்த்த வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் டிவி பார்க்க அனுமதிக்கக்கூடாது. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம். குழந்தைகளை டிவி பார்க்க அனுமதித்து விட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும். இதுபோன்ற செயல்களை கடைபிடிப்பதன் மூலம் குழந்தைகளை தொலைக்காட்சி எனும் மாயையில் இருந்து விடுவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக