புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

துப்பாக்கி படத்துக்குப் பிறகு, ஏஎல் விஜய் இயக்கத்தில், அமலா பால் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்.


இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட தலைப்பு தலைவன். ஆனால் இந்தத் தலைப்பை சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்துவிட்டார். இந்த தலைவன் தலைப்புக்கு முன்போ பின்போ ஏதாவது ஒரு வார்த்தையை சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ள இயக்குநர் விஜய் திட்டமிட்டபோது, ‘வேணாம் மச்சான் வேணாம் பெரிய இடத்துப் பொல்லாப்பு,’ என விஜய் தரப்பில் பலமாக எடுத்துச் சொன்னார்களாம்.

விளைவு… தங்கமகன் என்ற தலைப்பை பிடித்துக் கொண்டார்களாம் (ஏற்கெனவே ஒரு விஜய் படத்துக்கு அழகிய தமிழ்மகன் என பெயர் வைத்திருந்தார்கள்).

இந்தத் தலைப்பு ரஜினி – பூர்ணிமா நடிப்பில், ஏ ஜெகன்னாதன் இயக்கி சத்யா மூவீஸ் தயாரித்த சூப்பர் ஹிட் படத்துடையது. விஜய் கால்ஷீட்டுக்காக நப்பாசையுடன் காத்திருக்கும் சத்யா மூவீஸும் இதற்கு அனுமதி அளித்துவிட்டதாகத் தெரிகிறது.

விஷயம் செய்தியாக வெளியில் வந்ததும், மகா கடுப்பில் இருக்கிறார்கள் ஏற்கெனவே விஜய் படங்களை செமையாக ஓட்டும் ரஜினி ரசிகர்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top