புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அலகாபாத் அருகே கற்பழித்த காமகொடூரனைக் காட்டி கொடுத்த 16 வயது சிறுமியை, அவனும் அவனுடைய உறவினர்கள் சேர்த்து உயிருடன் எரித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்திலுள்ள சங்ககார்க் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த பெண்ணின் பெற்ற‌ோர்கள் இருவரும் வியாபாரிகள் என்பதால் வீட்டில் இல்லை.

அப்போது, பக்கத்தில் வீட்டிலிருந்த காமக்கொடூரன் ஒருவன் அந்த மாணவியை கற்பழித்துள்ளான். பெற்ற‌ோர்கள் வீடு திரும்பியதும் மாணவி தமக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்ற‌ோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்ற‌ோர்கள் நியாயம் கேட்க சென்றுள்ளனர். அப்போது அந்த ‌காமக்கொடூரனின் உறவினர்களுக்கும் ‌கற்பழி்க்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த காமக்கொடூரனின் உறவினர்கள் அந்த பெண்ணை உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.

அலட்சியப்படுத்தும் பொலிசார்:
இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்‌றோர் கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுது்து பெண் உரிமை சங்கத்தினர் இந்த சம்பவத்தை ஊடகங்களுக்கு கொண்டு சென்றதை அடுத்து பிரச்னை வெளியில் தெரிந்துள்ளது.

டில்லியில் ஓடும் பஸ்சில் ‌பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கி வரும் நிலையில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பின்மையில் உள்ள குறைபாட்டை வெட்ட வெளிச்சமாக்குவதாகவும் பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top