6 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்றவன் சிறுவன் என்பதால் தூக்கிலிருந்து தப்பினான்!
6 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற மைனர் சிறார் குற்றச்சடத்தின்
மூலம் மரண தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார். இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு மத்தய அரசை டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி மைனர் ஒருவர் 6 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி அதை இரண்டு பொதுக்கழிப்பிடங்களில் வீசிச் சென்றார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றமோ குற்றவாளி சிறுவன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைத்தது. அவரது வழக்கு சிறார் சட்ட வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ரிச்சா கபூர் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
6 வயது சிறுமியை மைனர் ஒருவர் திட்டமிட்டு கற்பழித்துக் கொன்றுள்ளார். அப்படி இருக்கையில் குற்றவாளி மைனர் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு சிறுமியைக் கொன்றவரை மைனர் கூறி பாதுகாப்பதா? எனவே, இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மாணவியின் வழக்கிலும் மைனர் என்பதால் ஒரு குற்றவாளி தூக்கில் இருந்து தப்பிக்கவிருக்கிறார். குற்றங்களை செய்துவிட்டு மைனர் என்று கூறி தப்பிப்பதை தவிர்க்க மைனருக்கான வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக