எனக்கு பிடித்தமானவரை பார்த்ததும் கல்யாணம் செய்து கொள்வேன். என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். த்ரிஷாவின் சமர் படம் பொங்கலுக்கு வருகிறது
. இதில் முதல் தடவையாக விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதையடுத்து ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தனர்.
இந்நிலையில் திருமணம் குறித்து த்ரிஷா பேட்டியளித்துள்ளார். அதில், என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. காதலிக்கிறேன். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். எனக்கு காதல் திருமணம்தான் நடக்கும். ஆனால் இப்போது திருமணம் பற்றி சிந்திக்கவில்லை. எனக்கு பிடித்தமானவரை சந்தித்ததும் திருமணம் நடக்கும். ஆனால் அப்படிப்பட்டவரை இதுவரை நான் சந்திக்கவில்லை, என்று கூறியுள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக