கொலைவெறி பாடல் புகழ் - நடிகர் தனுஷ் உடன் நடிக்க ஆசைப்படுவதாக மூத்த நடிகை வெண்ணிறஆடை நிர்மலா கூறியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக சிதம்பரம் வந்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரத நாட்டியம் ஆடுவதால் உடல்வலிமை, உற்சாகமும் இருக்கும். இதை மறந்தவிட்டு, நம்மிடையே மேற்கத்திய நடன கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இக்காலக்கட்டத்திலும், பரத நாட்டியத்தை முறைப்படியாக கற்றுக்கொள்ள இளம் தலைமுறைகள் சிலர் வருகின்றனர்.
நான் சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நிர்மலாஸ் அகாடமி பைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் பரத நாட்டிய பள்ளி அமைத்து மாணவ, மாணவிகளுக்கு நாட்டிய பயிற்சி அளித்து வருகின்றேன். பரத நாட்டியத்தை முறைப்படி இலக்கணத்துடன் கற்று கொள்வது அவசியமாகும், என்றார்.
இன்றைய சினிமா குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா, அந்த காலத்தில் நல்ல கதைகள் வைத்து நடிகை, நடிகர்களை களம் இறக்கி படமாக்கப்படும். ஆனால், தற்போது இளம் இயக்குநர்கள் பல நல்ல கதைகளை உருவாக்கி, அதற்கு ஏற்ப புதுநடிகை, நடிகர்களாக இருந்தாலும் தேர்வு செய்து படமாக்கியுள்ளனர்.
இது ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உதாரணமாக ஆட்டோகிராப், மைனா, வாகைசூடவா உள்ளிட்ட பல திரைப்படங்களை சொல்லலாம். எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் பிடிக்கும். அந்தவகையில் நடிகர் தனுஷ் பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். இதனால் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன், என்று கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக