பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையில் அதிகாரியாக தொழில் புரிந்து வந்த 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர்
கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்றுகாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பி;ள்ளைகளுக்குத் தந்தையான மெரிசான் அனன் என்பவராவார்.
நேற்றிரவு தேயிலைத் தொழிற்சாலையில் கடமையில் இருந்த இவர் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள தனது விடுதிக்கு இன்று அதிகாலைவேளையில் வந்துள்ளார். தனது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ள அவர் தனது மனைவியான ஆசிரியை பாடசாலைக்குச் சென்றதன் பின்பு வீட்டினுள்ள அறை ஒன்றில் கயிறொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
தொழிற்சாலை அதிகாரி காலையில் மீண்டும் வேலைக்கு வருகைத்தாரத காரணத்தினால் தோட்ட நிருவாகத்தினர் விடுதிக்கு வந்து கதவைத்தட்டியுள்ளனர். எந்த விதமான பதிலும் கிடைக்காத காரணத்தினால் கதவை உடைத்துக்கொண்டு விடுதிக்குள்ளே சென்ற போது அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்துத் தெரிய வந்துள்ளது.
இதன் பின்பு இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்து பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக