காதலி தனது நாட்டுக்கு புறப்படுவதை விரும்பாமல் தந்திரமொன்றை செய்த காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காதலர் தினத்தை கொண்டாடிய காதலியோ தனது நாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவம் கல்கிஸை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிலிப்பைன்ஸ் நாட்டு காதலியுடன் இலங்கையர் ஒருவர் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக இலங்கைக்கு வருகைதந்தார்.
இந்த ஜோடி கல்கிசையிலுள்ள ஒரு ஹோட்டலில் காதலர் தினத்தை கொண்டாடியது. இதன்பின்னர் குறித்த பெண் தனது நாட்டுக்கு திரும்புவதற்கு விமான நிலையத்திற்கு பயணமானார்.
தனது காதலியை பிரிய விரும்பாத இலங்கையரான காதலன் தனது பணத்தையும் பெறுமதியான பொருட்களையும் திருடிச்சென்றுக்கொண்டு தனது காதலி சென்றுவிட்டதாக கல்கிஸை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண் விமான நிலையம் செல்வதற்கு முன்னர் கைது செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது குறித்த பெண் எந்தவிதமான பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது உண்மை வெளியானது.
காதலியை வெளிநாடு செல்லவிடாமல் தடுப்பதற்காக காதலன் செய்த தந்திரமாகும் என்பதனை அறிந்துக்கொண்ட பொலிஸார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து. நீதவான் அவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனை வழங்கினார்.
மொரட்டுவை எகொட உயனவையைச்சேர்ந்த ரொமேஷ் பிரியங்கார என்பருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காதல் கசந்து போனதையடுத்து காதலி நாடு திரும்பிவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக