புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அலுமாரியொன்றை திருத்துவதற்கு சென்றபோது பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் 30 வயது
இலங்கையரொருவர் டுபாய் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 21 வயதான இந்தோனேஷிய பெண் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

'நவம்பர் 22ஆம் திகதி பிற்பகல்  ஒரு மணியளவில் கதவில் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தபோது சந்தேக நபர் அறைக்குள் நுழைந்துவிட்டார்.'

'அவர் அலுமாரி திருத்தவந்ததாகக் கூறினார். அலுமாரி எனது அறைத் தோழியினதெனவும் அவர் வெளியில் போய்விட்டதாகவும் கூறிய நான் அவரை வெளியில் போகுமாறு கூறினேன். ஆனால் அவர் வெளியில் போகவில்லை' என இப்பெண் நீதிமன்றத்தில் கூறினார்.

'அவர் எனது அருகில் கட்டிலில் அமர்ந்தார். நான் எழுந்தபோது கையைப் பிடித்து இழுத்தார். அவர் என்னை காதலிப்பதாகக் கூறினார்' என அவர் கூறினார்.

'நான் இதை ஏற்கவில்லையெனக் கூறி அப்பால் சென்றபோது என்னை தள்ளி கட்டிலில் வீழ்த்தினார்'

'சந்தேக நபர் தன்னைத் தழுவ முயன்றபோதும் தான் பலம் முழுவதையும் திரட்டி தப்பித்து சத்தமிட்டவாறு வெளியில் ஓடியதாக இப்பெண் கூறினார்.

பின்னர் அவன் ஓடிவிட்டான். அவன் தனது ஆயுதங்களையும் விட்டு சென்றுவிட்டான். எனது சக ஊழியர்களுக்கு நடந்ததைக் கூறினேன். பொலிஸிலும் முறைப்பாடு செய்தேன்' என அவர் கூறினார்.

நீதிமன்றம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top