ஜேர்மனியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் நேற்று பள்ளிக்கு துப்பாக்கி கொண்டுவந்ததால் பொலிஸார் அவனை கைது செய்து இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவனுக்கு 18
மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று தந்துள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் தன் 13 வயது காதலியை பிரிந்த சோகத்தில் இருந்த இச்சிறுவன் நேற்று பள்ளிக்கு இரு துப்பாக்கியுடன் வந்துள்ளான்.
அதில் ஒரு துப்பாக்கியை அவன் மேசைமேல் வைத்துள்ளதை கண்டு அருகில் இருந்தவர்கள் பயந்து தகவல்கள் கொடுத்ததன் பெயரில் அந்த இடத்திற்கு பொலிஸார் விரைந்து உள்ளனர்.
பொலிஸார் அவனை சூழ்ந்தவுடன் விளையாட்டு மைதானத்திற்குள் குதித்து தப்பி செல்ல முயன்ற பொழுது அவன் கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை மற்றும் பூமியை நோக்கி தொடர்ந்து சுட்டுகொண்டிருந்த வேளையில் ஒரு அதிகாரி அவனை குறி வைத்துபிடித்துள்ளார். இச்சம்பவத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்திய பொழுது இச்சிறுவன் துப்பாக்கியை யாரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரவில்லை என்பதால் அவனுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னர் அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளான்.
இது போன்று கடந்த 2009ம் ஆண்டு 17 வயது சிறுவன் ஒருவன் 9 சகமாணவர்களையும், 3 ஆசிரியர்களையும் துப்பாக்கியால் சுட்ட சோகமான சம்பவம் நினைவுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக