புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பணிப்புலம் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், காலையடியை வாழ்விடமாகவும் கொண்ட இராமநாதன் திருநாவுக்கரசு அவர்கள் 07.03.2013
அன்று கொழும்பில் சிவபதம் எய்தினார்.

அன்னார் அமரர்களான  இராமநாதன் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்;அமரர்களான  தில்லையம்பலம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்;பொன்னம்மா அவர்களின் அன்பு கணவரும்;
அமரர்களான சிவராமச்சந்திரன், சிவானந்தன் மற்றும் சிவபாலன், சிவகலா, வந்தமலர், இராசமலர், செல்வமலர் ஆகியோரின் அன்புத் தந்தையும்;யோகேஸ்வரி, கோகிலாதேவி, இராசகுரு, சிவமணி, விக்னேஸ்வரன், இரத்தினராசா, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்;சிவபதமெய்தியவர்களான மகேஸ்வரி(பவளம்), இரத்தினசிங்கம் மற்றும் நல்லம்மா(தங்கச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்;சிவபதமெய்தியவர்களான கார்த்திகேசு, தம்பிப்பிள்ளை, நல்லபிள்ளை, பொன்னுத்துரை, பாக்கியம், கனகசபை மற்றும் செல்லம்மா, தங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்;திலீபன், சிவரஞ்சனி, பிரதீபன், சந்திரவதனா, சிவகுமார், சுகந்தி, விதுஷா, கஜிதா, சஞ்சீவன், நிஷாந்தன், தர்ஷியா, சிந்துஜன், வித்தியா, பிரசன்னா, தர்ஷனா, மயூரன், கஜந்தன், கீர்திகன்,கீர்த்தனா, கீர்த்துஜா ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;

தாரகன், தரணிகா, லக்‌ஷனா, பிரவீன், சாதனா, ப்பிலானி, மிறோஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டனாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11.03.2013 திங்கட்கிழமை காலை; காலையடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,   நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்                                                                                          அன்னாரின் பிரிவால் துயரும் அவர்தம் குடும்பத்திரருக்கு சாந்தை இணையமும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருள் வேண்டி நிற்கின்றோம் . நன்றி           



தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர

சிவபாலன் (மகன்)- கனடா - 001-905-201-6131

இராசகுரு (மருமகன்) ஜேர்மனி: 0049-46116179

அம்பிகைபாகன் (மருமகன்) கொழும்பு: 0094-11-2542215

விக்கினேஸ்வரன் (மருமகன்) சுவிஸ்: 0041-319810649

இரத்தினராசா (மருமகன்) டென்மார்க்: 0045-74428927

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top