யாழில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ்-புகைப்படம்
யாழ் நகரில் சிறுமி ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி
வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது.
குறித்த சிறுமியுடன் தொடர்புடைய ஆண்களால் ஏனைய பெண்களுக்கும் எயிட்ஸ் பரவும் ஆபத்தை எவ்வாறு தடுப்பது?
சிறுமியுடன் தொடர்பு கொண்ட குடும்பஸ்தர்களின் மனைவிகளுக்கும்,அவர்களின் வயிற்றில் வளரும் கருவுக்கும் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் என்ன?
இவ்வாறு தவறான முறையில் உறவு கொண்டவர்கள் இந்தச் செய்தியை அறிந்து யாழ் போதனா வைத்தியசாலையை நாடி வந்தால்
யாழ் போதனா வைத்தியசாலை சரியான முறையில் அவர்களை பரிசோதனை செய்யும் அளவில் இருக்கின்றதா??
நாம் அறிந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலைப் பிரிவில் எயிட்ஸ் சோதனைப் பிரிவு செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
இந்தச் சிறுமியின் விடயமும் சிறுமி கர்ப்பம் தரிந்திருந்த வேளையே அறியப்பட்டது. அதுவும் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டே சோதனை செய்யப்பட்டது.
ஆகவே யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இவ்வாறான செயற்பாட்டிக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?
குறிப்பிட்ட சிறுமி தொடர்பாகவும் யாழ்ப்பாணத்தில் விபச்சாரத்தில் ஈடுப்ட்ட ஆண்கள் தொடர்பாகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்கள் இன்னும் சில நாட்களில் நாம் இங்கு தரவிருக்கின்றோம்.
0 கருத்து:
கருத்துரையிடுக