யாழ்ப்பாணம் வட்டுகோட்டைப் பொலிஸ் பிரிவில் 15 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான முறைப்பாடு கடந்த புதன்கிழமை பதிவு செய்யப்பட்டிருப்பதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் கருணரட்ன தெரிவித்துள்ளார்.
வலி. மேற்குப் பகுதியில் கடமையாற்றும் நன்னடத்தை உத்தியோகத்தர் ஒருவரினாலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் தலைமறைவாகியிருப்பதன் காரணமாக அவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வவுனியா பகுதியில் வசந்தன் குடியிருப்பு பூந்தோட்டம் பகுதியில் 15 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் ஒருவரை கடந்த 10ம் திகதி வவுனியா பொலிஸார் கைது செய்து வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக