புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மத்திய பிரதேச மாநிலம் டாடியாவில் சுவிட்சர்லாந்து நாட்டு பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த 8 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த சுவிஸ் தம்பதியினர் நேற்று மத்திய பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் தங்கியிருந்தனர். நேற்று ஓர்சா என்ற இடத்தில் இருந்து ஆக்ரா நோக்கி செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக சைக்கிளில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சுவிஸ் தம்பதியினரை மடக்கியது. கணவன் முன்பே அவரது மனைவியை பலாத்காரம் செய்துவிட்டு அக்கும்பல் தப்பி ஓடியது.
இதில் படுகாயமடைந்த சுவிஸ் பெண் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையி சுவிஸ் பெண்ணை பலாத்காரம் செய்த 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top