நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
2002ல் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கட்டா மிட்டா என்ற இந்திப் படத்திலும் நடித்தார்.
சாமி, கில்லி, திருப்பாச்சி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என்று பல படங்கள் திரிஷா நடிப்பில் வந்து வெற்றி பெற்றுள்ளன.
தற்போது ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று படங்கள் தவிர வேறு புதுப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை.
இந்த வருடத்தோடு இப்படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது.
திரிஷாவுக்கு 29 வயது ஆகிறது. எனவே விரைவில் திருமணத்தை முடிக்க அவரது தாய் உமா தீவிரமாக உள்ளார்.
உறவுக்கார இளைஞரை பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக