காஸா பகுதியில் உள்ள மலைக்குகை ஒன்று எகிப்து- பாலஸ்தீன ஜோடிகள் திருமணம் முடிப்பதற்கு உதவியுள்ளது.
எகிப்தைச் சேர்ந்த இமாத் அல்- மலாஹா(வயது 21) என்ற பெண்ணும் மனாஹல் அபூ ஷன்ஹார்(வயது 17) என்ற ஆணும் காதலித்து வந்தனர்.
ஆனால் இவர்களது காதல் இரு நாடுகளைத் தாண்டி நடைபெற்றமையால் திருமணம் தடையாகவே இருந்தது.
இரு நாட்டு எல்லைகளையும் அந்தந்த அரசாங்கம் மூடியமையால் திருமணம் முடித்துக்கொள்ளமுடியாமல் இருவரும் தவித்துவந்தனர்.
இந்நிலையில் எகிப்திலிருந்து காஸா(பாலஸ்தீனம்) பகுதிக்கு செல்லும் குகை வழியாக தனது காதலியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து திருமணம் முடித்திருக்கிறார் ஷன்ஹார்.
ஒரு வழியாக இவர்கள் காதலுக்கு இந்த குகை உதவியாக இருந்தமையால் காதலுக்கு உதவியதாக இக்குகை கருதப்படுகிறது.