ஆபாசத் திரைப்படங்களை தன்னுடன் சேர்ந்து பார்வையிடுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தி வந்த தந்தை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி மாவட்டத்தில் ஹபராதுவ மீபே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர் நாள் தோறும் ஆபாசத் திரைப்படங்களை பார்வையிடுவதாகவும், தன்னுடன் இணைந்து திரைப்படத்தை பார்க்குமாறு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகனை வற்புறுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபாசத் திரைப்படத்தை பார்வையிட மறுத்தால் மனைவியையும் பிள்ளைகளையும் குறித்த நபர் தாக்குவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிக மதுபோதையில் ஆபாசத் திரைப்படமொன்றை பார்வையிட்டுக் கொண்டிருந்த குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆபாசப் பட டி.வி.டிக்கள் மற்றும் சீடிக்கள் உள்ளிட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் இலங்கைப் பல்கலைக்கழகமொன்றின் ஆய்வுகூட உதவி அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.