புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



பிறந்து மூன்று நாளேயான சிசுவை 35,000 ரூபாவிற்கு விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் புசல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.



சிசுவின் தாய், தந்தை, சிசுவை கொள்வனவு செய்த பெண் மற்றும் இடைத்தரகர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா - லபுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த தாய், புசல்லாவ வஹுகபிட்டி வைத்தியசாலையில் கடந்த 15ம் திகதி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

சிசு பிறந்து மூன்று நாட்களில் தரகர் ஒருவர் மூலம் சிசு நயினாமடு பகுதியில் உள்ள 53 வயதுடைய பெண்ணுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


 
Top