புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பானைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் தனது 19 வயது மகனுடன் டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் அவரை சந்திக்க வந்த
உறவினர்கள், வீட்டில் அவரையும் அவரது மகனையும் காணாமல் திடுக்கிட்டனர்.

வீட்டில் சுற்றும் முற்றும் தேடிய போது, பிளாஸ்டிக் கவர்களில் ஒரு பெண்ணின் அழுகிப்போன உடல் பாகங்கள் மூலைக்கு ஒன்றாக சிதறிக் கிடப்பதை கண்டு மேலும் திகிலுக்குள்ளாயினர்.

இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த பொலிசார், அந்த பெண்ணின் மகனை கைது செய்து பொலிஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையின் போது, 'எனது தாய் சாதாரணமாக, எளிமையாக இருந்ததால் எனக்கு பிடிக்கவில்லை. அதனால், அவரை துண்டு துண்டாக வெட்டி, சில நாட்கள் குளியல் 'டப்'புக்குள் போட்டு வைத்திருந்தேன்.

நாளடைவில், துர்நாற்றம் தாங்க முடியாததால் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வீட்டிற்குள் ஒளித்து வைத்தேன்' என அந்த கொடூர மகன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

 
Top